Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 மே 27 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.விஜயவாசகன்
இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள். ஒவ்வொரு சங்கங்களிலும் இளைஞர், யுவதிகள் அங்கத்தவர்களாக இணைந்து தற்போதுள்ள மூத்த அங்கத்தவர்களது வழிகாட்டலில் தலைமைத்துவம், பண்பாடு மற்றும் ஒழுக்க விழுமியங்களைப் பயின்று சமூக நலன்களில் அக்கறையுள்ள நல்ல தலைவர்களாக பரிணமிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச அமைப்பாளர் க.அருந்தவபாலன் தெரிவித்தார்.
நுணாவில் மேற்கு ஐக்கிய நாணய சங்கத்தின் கட்டட திறப்பு விழா திங்கட்கிழமை (25) நடைபெற்றது.
சங்கத் தலைவர் ந.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்; இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச அமைப்பாளர் க.அருந்தவபாலன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நாடாவை வெட்டி கட்டடத்தை திறந்து வைத்தார். இதன் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய கிராம சேவையாளர் செல்வி தயானந்தி தங்கராசா,
சமூகநல நிலையங்களில் இளைஞர், யுவதிகள் இணைந்து கொள்வதன் மூலம் நல்லதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பலாம். வழிதவறிச் செல்லும் சில இளம் சமுதாயத்தினரால் மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இளைஞர்கள் ஆன்மீகத்தின் ஊடாக சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தம் சக்தியை பயன்படுத்த வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago