2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மாணவி கொலை சந்தேகநபர்களின் டி.என்.ஏ அறிக்கைக்காக காத்திருப்பு

George   / 2015 மே 29 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

புங்குடுதீவு மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களின் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், மாணவி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கமைய டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றோம் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .