2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பால் நிலை ரீதியிலான வன்முறை தொடர்பான கருத்தமர்வு

Sudharshini   / 2015 மே 30 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மன்னார் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் பால் மற்றும் பால் நிலை ரீதியிலான வன்முறை  ((SGBV)  தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு வெள்ளிக்கிழமை (29) மன்னார் சித்திவிநாயகர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

நாட்டில் தற்போது பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்துவதை இலக்காகக் கொண்டு   இந்த விழிப்புணர்வு நடைபெற்றது.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அழகக்கோன் கருத்தமர்வினை ஆரம்பித்து வைத்தார்.   
பாடசாலை மாணவர்கள் மத்தியில் இலகுவில் புகுந்து கொள்ளக்கூடிய புகைத்தல், மதுபாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை, அவற்றால் ஏற்படும் சமூக விரோத செயற்பாடுகள் அதன் தாக்கம், விளைவு என்பன பற்றி விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.

அதேவேளை, நாட்டில் அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களின் அடிப்படையில் பாடசாலை சமூகம் தமது பாதுகாப்பு தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

கருத்தமர்வில் சட்டத்துறை சார்ந்தோர், பெண்கள் சிறுவர் பொலிஸ் பிரிவு, சிறுவர் உரிமை தொடர்பாக கடமையாற்றும் அரச ஸ்தாபனங்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் விளக்கமளித்தனர்.

இந்த விழிப்புணர்வு  கருத்தரங்கில் மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அழகக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சியாந்த பீரிஸ், மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜந்த ரொட்ரிக்கோ, பாடசாலையின் அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .