Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Thipaan / 2015 மே 30 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோகீன் தலைமையிலான நோர்வே நீரியல் நிபுணர்கள், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (29) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
வட மாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அழைப்பின் பேரில், சுன்னாகம் பகுதியில் தரையை ஊடுருவும் ரேடாரைப் பயன்படுத்தி இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அண்மையில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது.
இதற்கான அனுசரணையை நோர்வே வழங்கியிருந்தது. இதன் அடுத்த கட்ட ஆய்வுக்காகவே நோர்வே புவிச்சரிதவியல் நிறுவகத்தைச் சேர்ந்த நீரியல் நிபுணர்கள், யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்த நோர்வே நிபுணர்கள் நொதேண்பவர் மின் நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளையும் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அத்தோடு, சுன்னாகம் பிரதேச ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் வடமாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவைச் சேர்ந்தவர்களையும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தை சேர்ந்தவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இவற்றையடுத்தே, தமது அவதானிப்புகளைத் தெரிவிக்கும் முகமாக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை சந்தித்துள்ளனர்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நிலத்தடிப் படிவுகள் தொடர்பான ஆய்வுகளின் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
மேலும், இதன் அடிப்படையில் மண் பரிசோதனைகள் நொர்தேண் பவர் மின் நிலையத்தை அண்டி ஆழ்துளையிட்டு மேற்கொள்ளப்படும்.
இம்முடிவுகள் வெளியான பின்பு நோர்வே நிபுணர்குழு தமது ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய சந்திப்பில் விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி சோ.சண்முகானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago