Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Thipaan / 2015 மே 30 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
புங்குடுதீவு, காரைநகர் மற்றும் மாதகல் போன்ற பகுதிகளில் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படுவதன் அவசியத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் அவதானத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் தற்போதுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாகவே இப்பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவேண்டுமென, டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
தீவகப்பகுதியைப் பொறுத்தவரையில், தற்போது ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் அப்பகுதிக்கான தலைமையக பொலிஸ் நிலையமாகச் செயற்பட்டு வரும் நிலையில், நெடுந்தீவில் மாத்திரமே பொலிஸ் நிலையம் உள்ளது.
காரைநகர், நயினாதீவு, குறிகாட்டுவான் மற்றும் மன்டைதீவு ஆகிய பகுதிகளில் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் தங்களது தேவைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை காவலரண்களில் பதிவு செய்ய முடியாது பெரும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
அதேவேளை, அண்மித்து பொலிஸ் நிலையங்கள் இல்லாததால் பல பகுதிகள் பல்வேறு சமூக சீர்கேடுகள் இடம்பெற வாய்ப்பாக இருக்கின்றன.
கடந்த கால ஆட்சியில் நாம் இந்த விடயத்தை வலியுறுத்தி, இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
மண்டைதீவிலும் காரைநகரிலும் காவலரண்களை நாம் ஏற்படுத்தினோம். எனினும் காரைநகர் காவலரண் காவல் நிலையமாக மாற்றப்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.
குற்றங்கள் நடப்பதற்கு முன் அவற்றைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்கூட்டியே எடுக்க வேண்டும்.
அதே நேரம், மாதகல் பகுதியில் ஒரு பொலிஸ் நிலையம் அமையப் பெறுவதும் அவசியமாகும். ஏனெனில், இப்பகுதி ஊடாக போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் பாரியளவில் இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தள்ளன.
பொலிஸ் நிலையங்களில் பொலிஸாரின் எண்ணிக்கையும் பற்றாக்குறைவாக இருப்பதாக தொடர்ந்தும் கூறப்படுகின்றது.
எனவே, எமது பகுதி மக்களுடன் உணர்வுப்பூர்வமாக ஒத்துழைத்து செயலாற்றக்கூடிய பொலிஸார் போதியளவில் நியமிக்கப்பட வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago