Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Sudharshini / 2015 மே 30 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
பண்டத்தரிப்பு பகுதியில் 1,000 ரூபாய் போலிநாணயத்தாளை மாற்ற முற்பட்ட மட்டக்களப்பு பகுதியினை சேர்ந்த நபரை, எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டத்தரிப்பு பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் வியாழக்கிழமை (28) பொருட்களை கொள்வனவு செய்ய குறித்த நபர், பொருள் கொள்வனவுக்கான பணத்தை வர்த்த நிலைய உரிமையாளரிடம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து தனக்கு வழங்கப்பட்ட 1,000 ரூபாய் நாணயத்தாள் போலி என்பதனை அறிந்து கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர், இது தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
இது குறித்து கைதான சந்தேகநபரை விசாரணை செய்ததில் கல் உடைக்கும் நிறுவனத்தில் சம்பளமாக வழங்கப்பட்ட பணம் இது என அவர் தெரிவிதுள்ளார். இதனையடுத்து சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
32 minute ago
36 minute ago
1 hours ago