Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Thipaan / 2015 மே 30 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
போதைப்பொருள் பாவனை பாலியல் வன்புணர்வுகள், கொலைகள் வாள்வெட்டுக்கள் என எமது சமூகத்தின் ஒரு தலைமுறை எமது வரலாற்றை மறந்து எங்கேயோ போய்க்கொண்டிருக்கின்றது. சமூக விரோதச்செயல்களை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு சகலருக்கும் அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
'நமது சமூகத்தின் இன்றைய சூழ்நிலை அருவருக்கத்தக்க விடயங்களை வெளிக்கொண்டு வந்து எமது கடந்த கால புனிதங்களுக்கு அபகீர்;;த்தி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது'. என தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத்திட்டத்தில் விநாயகர் சனசமூக நிலையத்தில் சனசமூக நிலையத்தலைவர் நவரத்தினம் தலைமையில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
'வருங்கால எமது சந்ததிகளின் வாழ்வு பற்றிய ஏக்கம் எல்லோரிடமும் ஏற்பட்டிருக்கின்றது. பல விடயங்களை முளையிலேயே கட்டுப்படுத்த தவறியிருக்கின்ற குற்ற உணர்வு நம் எல்லோருக்கும் உரியது.
எமது சமூகம் கடந்த காலத்தில் திட்டமிட்டு ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டு அவர்களிடம் தவறான சமூக விரோதச் செயல்கள் விதைக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு இருக்கின்றது. அதன் விளைவுகளை நாம் இன்று அனுபவிக்கின்றோம்.' என கூறினார்.
'எனவே எமது சமுதாயத்தின் விழிப்புணர்வையும் எமது மொழி இனம் பண்பாடு பற்றிய பற்றுதலையும் ஏற்படுத்தி எமது இளைய சமுதாயத்தின் சிந்தனைகள் நல்லதொரு திசையை நோக்கி திருப்பப்பட நாம் அனைவரும் பாடுபட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இந்த கிராம மக்களின் பிரச்சனைகள் தேவைகள் பற்றி இன்று இந்த கலந்துரையாடலில் அறிய முடிந்துள்ளது. அவற்றை தீர்த்துவைக்க என்னால் முடிந்த வரையில் பாடுபடுவேன். உரிய அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வேன் ' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago