Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 01 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் கொலை மற்றும் அதன் பின்னர் பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றநிலைகள் தொடர்பான வழக்குகள், இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களின் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு வழமையை விட பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மாணவியின் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் இன்று திங்கட்கிழமை (01) ஊர்காவற்றுறை நீதிமன்றத்திலும், நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் இன்று விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றன.
இந்நிலையில், யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் கலகக்காரர்களை கலைக்கும் தண்ணீர் பவுஸர் வாகனம் உள்ளிட்டவையும் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, யாழ். நகரத்தின் முக்கிய சந்திகளில் கலகம் அடக்கும் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 சந்கேதநபர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் மீண்டும் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். அதேவேளை நீதிமன்ற வளாகத்தில் கலகம் விளைவித்த 130 பேரில் 47 பர் இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago