Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Gavitha / 2015 ஜூன் 01 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ். அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகிலுள்ள வீடொன்றுக்குள் ஞாயிற்றுக்கிழமை (31) மாலை உள்நுழைந்து வீட்டிலிருந்து பணம், நகை மற்றும் உடமைகள் என 3 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்தவர்கள் ஆலயமொன்றுக்குச் செல்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 56 ஆயிரம் ரூபாய் பணம், 5 பவுண் நகை, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி ஆகிய இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
வீட்டு உரிமையாளர் திங்கட்கிழமை (01) செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago