2025 ஜூலை 02, புதன்கிழமை

வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை

Menaka Mookandi   / 2015 ஜூன் 04 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இலங்கைப் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடமாடும் சேவையொன்று, வெள்ளிக்கிழமை (05) தென்மராட்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைப் பிரசவித்த இலங்கைப் பெற்றோர், தற்போது மீண்டும் இங்கு வந்து வாழ்ந்து வருகையில் அவர்களின் குழந்தைகளுக்கு இந்த நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.

தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள இத்தகைய பெற்றோர்கள் இந்த நடமாடும் சேவை மூலம் பயனைப் பெறமுடியும் என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .