2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பிரதேச சபையால் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை

Gavitha   / 2015 ஜூன் 04 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பரமன்கிராய் பகுதி மக்கள் தங்களுக்கு பிரதேச சபையால் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லையெனவும் போதியளவு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி,  கிராம அலுவலர் ஊடாக இந்தப்பகுதி மக்கள் பூநகரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்தக் கிராமத்தில் சுமார் 110 குடும்பங்கள் வசித்து வருகையில். ஒரு குடும்பத்துக்கு வாராந்தம் 90 லீற்றர் குடிநீர் விநியோகிக்கப்படுவதுடன், அதற்காக 60 ரூபாய் கட்டணம் பிரதேச சபையால் அறவிடப்படுவதாகக் கூறினர்.

இந்தக் குடிநீர் தங்களுக்கு போதுமானதாகவில்லையெனவும்  வழங்கப்பட்ட குடிநீர் முடிவடைந்ததும் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அவர்கள் கூறினர்.

பூநகரியின் 11 கிராமங்களுக்கு வருடம் முழுவதும் குடிநீர் வழங்க வேண்டிய தேவையுள்ளதாக அதிகளவான குடிநீரை விநியோகிக்க முடியவில்லையென பிரதேச சபை நிர்வாகம் கூறியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .