2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது

Gavitha   / 2015 ஜூன் 04 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

உடுவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (02) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில், பிரதேசசபை பணியாளர் உட்பட இருவர் படுகாயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில்,  பெண்ணொருவர் வியாழக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட பெண், வாள்வெட்டுக்கு இலக்காகிய பிரதேச சபை பணியாளரின் மனைவியின் தாயார் எனவும் மூளாயைச் சேர்ந்த இவர்,  தனது மகன்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வந்து இந்த வாள்வெட்டுச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதனுடன் தொடர்புடைய மிகுதி நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

வீட்டிலிருந்த பிரதேசசபை பணியாளரை வானில் வந்த 7 பேர் கொண்ட குழு, வாளால் வெட்டி விரட்டியதுடன், சத்தம் கேட்டு ஓடிச் சென்ற அயல் வீட்டுக்காரர் மீதும் அந்தக்குழு வாளால் தாக்குதல் நடத்தியுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியரான தங்கவேல் கருணாகரன் (வயது 35), கூலி வேலை செய்யும் குணரத்தினம் கஜேந்திரன் (வயது 25) ஆகிய இருவருமே படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .