2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தம்பாட்டியில் 10 பேருக்கு நண்டு வளர்ப்பு கூடுகள்

Gavitha   / 2015 ஜூன் 04 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

ஊர்காவற்றுறை தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்குட்பட்ட 10 பயனாளிகளுக்கு நண்டு வளர்ப்புக்கான கூடுகள் வழங்கப்பட்டுள்ளதாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி அன்ரன் யோகநாயகம் தெரிவித்தார்.

பாசிக் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கடல்நீர் வளர்ப்புத் திட்டத்தின், பெரு நண்டு வளர்ப்புத் திட்டத்தில் இணைந்த பயனாளிகளுக்கு இந்த கூடுகள் வழங்கப்பட்டுள்ளன.

பெரு நண்டுகளுக்கு சந்தையில் அதிகளவான கேள்வியுள்ளமையால் அவை நல்ல விலைக்கு விற்பனை செய்யக்கூடியதாகவிருக்கின்றது. அதிகரித்த கேள்வியை நிவர்த்தி செய்யவும் பின்தங்கிய கிராம மக்களின் வாழ்வாதாரத்தை வளர்ச்சியடையச் செய்யவும் இந்த பெரு நண்டு வளர்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதற்கான பயிற்சிகள் ஏற்கெனவே நிறுவனத்தால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .