Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஜூன் 04 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
யாழ். பாரவூர்தி சங்கத்திலுள்ள பாரவூர்தி உரிமையாளர்களுக்கு மகேஸ்வரி நிதியத்தால் வழக்கப்படவேண்டிய பணமானது, கடந்த முதலாம் திகதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் இன்னமும் வழங்கப்படவில்லையென பாரவூர்தி சங்க நிர்வாகம் கூறியுள்ளது.
மகேஸ்வரி நிதியத்துக்கு மணல் ஏற்றி இறக்குவதற்காக பாரவூர்தி சங்கத்திலுள்ள 575 பாரவூர்தி உரிமையாளர்கள், நிதியத்துக்கு வைப்புப் பணம் செலுத்தியிருந்தனர். அத்துடன், ஒவ்வொரு முறை மணல் ஏற்றி இறக்கும் போதும் சேமப்பணம் செலுத்தி வந்துள்ளார்.
இவ்வாறு 20 மில்லியன் ரூபாய் பணம் மகேஸ்வரி நிதியம் பாரவூர்தி சங்கத்தினருக்கு வழங்க வேண்டும். இதனை வழங்கக்கோரி பாரவூர்தி சங்கத்தினர் மூன்று தடவைகள் போராட்டம் செய்திருந்தனர்.
இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்டவர்களிடம் முறையிட்டிருந்தனர்.
பாரவூர்தி சங்கத்தினரையும் மகேஸ்வரி நிதியத்தினரையும் தனது அலுவலகத்துக்கு அழைத்த வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர் முன்னிலையில் கலந்துரையாடலை நடத்தினார். இந்த கலந்துரையாடலில் ஜூன் மாதம் 01ஆம் திகதியிலிருந்து கட்டம் கட்டமாக பணத்தைத் திரும்பவும் வழங்குவதாக மகேஸ்வரி நிதியத்தினர் கூறியிருந்தனர்.
இருந்தும் இதுவரையில் தங்களுக்கான ஒரு கட்ட நிதிகூட வழங்கப்படவில்லையென பாரவூர்தி சங்கத்தினர் கூறினர்.
இது வடமாகாண ஆளுநரிடம் கொடுத்த வாக்கை மகேஸ்வரி நிதியம் மீறுவதாக இருப்பதாக சங்கம் கூறியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
46 minute ago
49 minute ago
56 minute ago