2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

குடும்பஸ்தரை காணவில்லை

Menaka Mookandi   / 2015 ஜூன் 05 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், அனலைதீவு, 6ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த செவ்வராசா ரமேஸ் (வயது 36) என்பவரை புதன்கிழமை (03) தொடக்கம் காணவில்லையென அவரது உறவினர்கள் வியாழக்கிழமை (04) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத் தலைவரைச் சந்தித்துவிட்டு வருவதாக கடந்த புதன்கிழமை (03) வீட்டிலிருந்து புறப்பட்டவர் இதுவரையில் வீடு திரும்பவில்லையென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.\


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .