Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 05 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம், கந்தரோடை அருளானந்த பிள்ளையார் ஆலயத்தில் வியாழக்கிழமை (04) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற குழு மோதலில் 8பேர் காயங்களுக்கு ஊள்ளாகி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மோதலில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்தனர். இசை நிகழ்ச்சிக்கு மதுபோதையில் சென்ற இளைஞர்கள் சிலர் இசை நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.
இதனையடுத்து கூச்சலிட்ட இளைஞர்களுக்கும் அப்பகுதி இளைஞர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. உடனடியாக இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற சுன்னாகம் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இருவரைக் கைது செய்தனர்.
ஒலிபெருக்கியை இரவு 9 மணிவரை ஒலிக்கவிடுவதற்கு அனுமதி வழங்கியிருந்ததாகவும், இசை நிகழ்ச்சி நடத்துவது தொடர்பில் தங்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லையெனவும் பொலிஸார் கூறினர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago
37 minute ago
44 minute ago