2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சாதாரணதர அடைவு மட்டத்தை அதிகரிக்க செயற்றிட்டம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வடமாகாணத்தின் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை வடமாகாண கல்வித் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலைகளில் பெறப்படும் சித்தி வீதங்களின் அடிப்படையில் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

கடந்த வருட பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களில் சித்தி வீதங்கள் மற்றும் பெறுபேறுகள் என்பவற்றின் பகுப்பாய்வுக்கு ஏற்ப மாதிரிப் பரீட்வை விளக்கச் செயலமர்வுகள் வலயக் கல்வி வலயங்கள் ஊடாக மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வருடம் டிசம்பர் மாதம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாதிரிப் பரீட்சைகள் மற்றும் வழிகாட்டல் கருத்தரங்குள் தற்போது நடத்தப்படுகின்றன.

கடந்த வருட பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் சித்திவீதம் குறைந்த பாடசாலைகளின் அதிபர், பாட ஆசிரியர்களுக்கான செயலமர்வு மருதனார்மடத்திலுள்ள மாகாண கல்வித் திணைக்களத்தில் அண்மையில் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நிலையறிந்து அவர்களின் நிலைக்கு ஏற்ப கற்பித்தல் செயற்றிட்டங்களை முன்னெடுத்து பரீட்சை அடைவுமட்டத்தை முன்னேற்றுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .