Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 02 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
குப்பிளான் தெற்கு பகுதியில் தனிமையில் இருந்த பெண் மீது இனந்தெரியாத நபர்கள் செவ்வாய்க்கிழமை (30) தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண் இதுவரையில் மயக்க நிலையில் இருந்து மீளவில்லையெனவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று பிள்ளைகளின் தாயரான திருமதி அ.செந்தில்குமார் (வயது 30) என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிள்ளையை முன்பள்ளிக்கு அனுப்பிய தாய் மீண்டும் பிள்ளையை அழைத்துச் செல்வதற்கு வராததையடுத்து, பெண்ணின் மாமியார் பிள்ளையை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்ற சமயம் குறித்த பெண் தாக்குதலுக்குள்ளாகி இரத்தம் சிந்திய நிலையில் மயக்கத்தில் இருந்துள்ளார். மாமியார் உடனடியாக பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
9 minute ago
25 minute ago
27 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
27 minute ago
53 minute ago