2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்

George   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை(04) இரவு இடம்பெற்ற கத்திக் குத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த மாதவன் கோவிலன் (வயது 22) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்காகி கையில் படுகாயமடைந்தார்.

சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவரை, இடையில் மறித்த நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்தியால் குத்தியவர் தலைமறைவாகியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .