Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கர்ணன்
கடந்த 3 தினங்களாக, வடமராட்சி கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனால், தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் இ.அருள்தாஸ், இன்று புதன்கிழமை (05) தெரிவித்தார்.
'கடந்த பல மாதங்களாக அத்துமீறாத மீனவர்கள், கடந்த 3 தினங்களாக வடமராட்சி கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைகின்றனர். கரையிலிருந்து சுமார் 10 கடல் மைல் தூரத்துக்கும் குறைந்தளவு தூரத்துக்கு வந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது' என கூறினார்.
'பகல் வேளைகளில் அதிகளவான தூரத்தில் நின்று மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், இரவானதும், அத்துமீறி எமது கடல் எல்லைக்குள் நுழைகின்றனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் வடமராட்சி பகுதி கடற்படைத் தளபதிக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.
25 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
57 minute ago