Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரனுக்காக பிரசாரம் செய்யமாட்டேன் என நான் கூறியதாக வெளியாகிய செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.
கைதடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றிய கஜதீபன், சுமந்திரன் தேசத் துரோகியெனவும் அவருக்காக தான் பிரசாரம் செய்யமாட்டேன் எனவும் உரையாற்றியதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அச்செய்தி தொடர்பில் பதிலளிக்கையிலேயே கஜதீபன் மேற்கண்டவாறு கூறினார்.
அது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பங்கள் இருப்பது போல பொதுமக்களுக்கு காட்ட முனைந்தவர்கள் மீண்டும் ஒரு தடவை இவ்வாறு செய்துள்ளனர்' என்றார்.
'எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றுமுழுதாக வெற்றிகொள்ளப் போகிறது. இதனால், பலவீனப்பட்டு இருப்பவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சில உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் கைதடியில் நடைபெற்றது விளையாட்டுப் போட்டி. அது தேர்தல் பிரசாரக் கூட்டம் அல்ல. இந்த விளையாட்டு போட்டிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சுமந்திரன் விழாக் குழுவின் அழைப்பின் பேரில் கலந்துகொண்டிருந்தார், அவர் தானாக அங்கு வரவில்லை' என கஜதீபன் தெரிவித்தார்.
25 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
57 minute ago