2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கசிப்பு வைத்திருந்தவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம், எருவன் பகுதியில் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி பொருட்களுடன் கைதான 42 வயதுடைய நபருக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செல்லையா கணபதிபிள்ளை, புதன்கிழமை (05) உத்தரவிட்டார்.

கொடிகாமம் பொலிஸாரால் கடந்த 01 ஷஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 3 போத்தல் கசிப்பு வைத்திருந்த குற்றத்துக்கு 50,000 ரூபாயும், 750 மில்லிலீற்றர் கோடாவை தம் வசம் வைத்திருந்தமைக்கு 50,000 ரூபாயும் அபராதமாக விதித்த பதில் நீதவான், அபராத தொகையை கட்டத்தவறின் ஆறுமாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .