Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
பொது இடத்தில் தேர்தல் துண்டுப்பிரசுரம் விநியோகத்தமை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலமளிக்கவேண்டும் சாவகச்சேரி மாவட்ட நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வியாழக்கிழமை (06) உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு சாவக்சேரி நீதவான் ஒத்திவைத்தார்.
கடந்த சனிக்கிழமை (01) சாவகச்சேரி பஸ் நிலையத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர் மூவரைப் சாவகச்சேரி பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விடுவித்திருந்தனர்.
இது தொடர்பில் கஜேந்திரகுமாரை பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு கடந்த திங்கட்கிழமை (03) அழைத்திருந்தபோதும், அவர் நிகழ்வு ஒன்றுக்குச் செல்லவிருந்தமையால் பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்க முடியாமை தொடர்பில் உதவியாளர் மூலம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் விதிமுறையை மீறிச் செயற்பட்டதாக கஜேந்திரகுமாருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். இதன் நிமித்தம் வியாழக்கிழமை (06) நீதிமன்றத்துக்கு வருகை தருமாறு நீதிமன்றத்தால் புதன்கிழமை (05) கஜேந்திரகுமாருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
அதன்படி கஜேந்திரகுமார், வியாழக்கிழமை (06) நீதிமன்றில் ஆஜராகியபோதே நீதவான் மேற்படி உத்தரவிட்டார்.
23 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
55 minute ago