2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மணல் அகழ்ந்தவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பளை சேரன்பற்று பகுதியில் உள்ள குளம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்ததாகக் கூறப்பபடும்  யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாரவூர்தி சாரதி ஒருவரை வியாழக்கிழமை (06) கைதுசெய்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் மணல் அகழப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சிவில் உடையில் அங்கு சென்றனர். சிவில் உடையில் வந்தவர்கள் பொலிஸார் என உணர்ந்து கொண்ட கூலியாட்கள் காட்டு வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.

பாரவூர்தியினை மீட்ட பொலிஸார், சாரதியினை கைது செய்ததுடன், ஏனைய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .