2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பாண் வியாபாரியை தாக்கிய ஐவருக்கு விளக்கமறியல்

George   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மீசாலை பாலாவி பகுதியில் பாண் வியாபாரத்தில் ஈடுபட்ட வான் உரிமையாளரை தாக்கிய சந்தேகநபர்கள் ஐவரையூம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் செல்லையா கணபதிபிள்ளைஇ வியாழக்கிழமை (06) உத்தரவிட்டார்.

புதன்கிழமை (05)  இரவூ மீசாலை பகுதியூ+டாக சென்ற பாண் விற்பனை செய்யூம் வாகனத்தை இளைஞர் குழு ஒன்று மறித்துள்ளது. அதன்போது நிற்காது சென்ற வானை மறித்த இளைஞர் குழுவினர் சாரதிஇ மற்றும் விற்பனையாளரை கடுமையாக தாக்கியூள்ளனர்.

இச்சம்பவத்தில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளானதுடன்இ வாகனமும் சேதமாக்கப்பட்டிருந்தது.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஐவரை கைது செய்திருந்ததுடன் அவர்களை வியாழக்கிழமை(06) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .