Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எம்.எல்.லாபீர்
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று வெள்ளிக்கிழமை (07) காலையில் ஒஸ்மானியக் கல்லூரி முன்றலில் நடைபெற்றது.
நீண்டகாலமாக நிலவிவரும் இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாணவர்களுடன் பெற்றோர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, பாடசாலை ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அழைத்தமையால் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்றதும் பெற்றோர்கள் சுலோகங்களை தாங்கியவாறு போராட்டம் செய்தனர்.
அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நிரந்தர அதிபர் நியமனத்தில் குழப்பம் இருப்பதாகவும், தங்களுடைய கோரிக்கைகளை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து தீர்த்து வைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
மேற்படி பாடசாலையில் கடந்த 11 வருடங்களாக அதிபராகக் கடமையாற்றிய மௌலவி முபாறக், முன்னாள் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியினால் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் இந்தப் பாடசாலைக்கு நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படாத நிலையில் பதில் அதிபராக எம்.மகேந்திரராசா கடமையாற்றுகின்றார்.
இந்தப் பாடசாலைக்கு புதிய அதிபராக பாணாந்துறை முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.அஸ்ரப் நியமிக்கப்பட்டும் அவருக்கு அங்கு விடுப்புக் கொடுக்காமையால் அவர் இங்கு கடமையை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
24 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
56 minute ago