Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இளவாலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பொலிஸாரின் அனுமதி இன்றி ஒலிபெருக்கி பாவித்த ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவரை சனிக்கிழமை (08) கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி தேவாலயத்தில் ஒலிபரப்பப்படும் தேவ கீதங்கள், அதிக சத்தத்துடன் காணப்படுவதால் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக அப்பகுதி மக்கள் சிலர் இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
மேற்படி விடயம் தொடர்பில், பொலிஸார் பலமுறை கூறிய போதும் தேவாலய நிர்வாகத்தினர் அதனை பொருட்படுத்தாது தொடர்ந்தும் அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கியினை பாவித்து வந்துள்ளனர்.
சனிக்கிழமை (08) குறித்த ஆலயததுக்கு சென்ற பொலிஸார், நிர்வாக சபை உறுப்பினர் ஒருவரை கைது செய்ததுடன், அவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
6 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
4 hours ago