2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

தன்னிச்சையாக நடக்கிறார் சங்கரி: தங்க முகுந்தன்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கூட்டணி சம்பந்தமான முடிவுகளை தன்னிச்சையாக எடுத்து வருவதாக கூட்டணியிலிருந்து அண்மையில் வெளியேறிய அக்கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினர் தங்க முகுந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்துக்கான வேட்பாளர் தெரிவுக்கு பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்த சங்கரி, அதன்பின் கட்சியின் உறுப்பினர்களோடு ஏதேனும் ஒரு சந்திப்பை நடத்தாமல் தனது எண்ணப்படி நடந்துகொள்கிறார்' என்றார்.

இதற்கமைய, யாழ்ப்பாணத்துக்கு வெளியே, வடக்கு - கிழக்கிலும் வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களிலும் மத்திய மாகாணத்தின் நுவரெலியாவிலும் மேல் மாகாணத்தில் கொழும்பிலும் போட்டியிடுவதற்கு ஆயத்தமாகியதையும் சிலரது அறிவுறுத்தல்களுக்கு அமைய நுவரெலியாவிலும், திகாமடுல்ல மாவட்டத்திலும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யாது ஏனைய மாவட்டங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததுடன் அவர் கொழும்பில் எமது கட்சியில் சில சிங்களப் பிரமுகர்களையும் போட்டியிட வைத்துள்ளமை எம் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுபற்றி எவரும் அவரிடம் முறையிட மாட்டார்கள். ஏனெனில்;, மற்றவர்கள் கருத்துச் சொல்வதை கேட்காது ஆனந்தசங்கரி தவிர்க்கின்றார். அவருடன் ன் சிலர் எதிர்வாதம் புரிய தைரியமில்லாமல் மந்தைகளாக தலையாட்;டிக் கொண்டு இருக்கின்றனர். சிலர் இந்தக் கட்சியில் இருக்க முடியாது என வேறு கட்சிகளுடன் இணைந்துள்ளனர். ஆனந்தசங்கரியின் மறைவுக்குப் பின்னர் கட்சியில் ஜனநாயகம் ஏற்படும் என்னும் வகையில் சிலர் இன்னமும் கட்சியில் இருக்கின்றனர்' என்று தங்க முகுந்தன் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X