Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக இலவச பஸ் சேவை நடத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன் தெரிவித்தார்.
கரவெட்டி பிரதேச செயலகத்திலிருந்து குஞ்சர் கடையடி, நெல்லியடி, கொடிகாமம் வீதி, துன்னாலை கலிகைச்சந்தி, மந்திகைச்சந்தி, மாலுசந்தி, உடுப்பிட்டி, அச்சுவேலி, புன்னாலைக்கட்டுவன், வசாவிளான், மல்லாகம் ஊடாக தெல்லிப்பளை வரை ஒரு பஸ் சேவையும் கோப்பாய் பிரதேச செயலகத்திலிருந்து மானிப்பாய் வீதி, கோப்பாய் கிருஸ்ணன் கோவிலடி, உரும்பிராய்சந்தி, பலாலி வீதி, புன்னாலைக்கட்டுவன், வசாவிளான், மல்லாகம், தெல்லிப்பழை ஊடாக வீமன்காமம் வரை ஒரு பஸ் சேவையும் வழங்கப்படவுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்திருந்து கற்கோவளம், மணியன்காரன் சந்தி, முனை, வியாபாரி மூலை, இன்பரூட்டி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, அச்சுவேலி, புன்னாகை;கட்டுவன், வசாவிளான் மல்லாகம், தெல்லிப்பழை ஊடாக வீமன்காமம் வரை ஒரு பஸ் சேவையும், பருத்தித்துறை பிரதேச செயலகத்திலிருந்து, முதலாம் கட்டச் சந்தி, மந்திகைச் சந்தி, தம்பசிட்டி, வியாபாரிமூலை, இன்பரூட்டி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, அச்சுவேலி, புன்னாலைக்கட்டுவன், வசாவிளான், மல்லாகம், தெல்லிப்பழை ஊடாக வீமன்காமம் வரை ஒரு பஸ் சேவையும் ஏற்படுத்தப்படவுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திலிருந்து, கட்டுடை முகாம், அரசடிச் சந்தி, நவாலிச் சந்தி, ஆனைக்கோட்டை சந்தி, சுதுமலைச் சந்தி, மானிப்பாய் சந்தி, மருதனார்மடச் சந்தி, சுன்னாகம் ஊடாக தெல்லிப்பழை வரையில் ஒரு பஸ் சேவையும், சண்டிலிப்பாய் பிரதேச பிரதேச செயலகத்திலிருந்து, மாசியப்பிட்டி முகாம், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, பெரியவிளான் ஊடாக தெல்லிப்பழை வரை ஒரு பஸ் சேவையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
20 minute ago
24 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
24 minute ago
3 hours ago