Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
கடந்த வருடம், வடக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், 38 விசைப்படகுடன் 171 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாக, கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், அதிகளவான மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்தே கைதுசெய்யப்பட்டனரெனவும் இவர்களில் 156 பேர் நீதிமன்றங்களின் உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளனரெனவும் கூறினார்.
தொடர்ந்தும் 14 மீனவர்கள் தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், கைப்பற்றப்பட்ட 38 இந்திய விசைப் படகுகளில் 9 விசைப்படகுகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனவனவும் தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டில் 48 படகுகளுடன் 220 மீனவர்களும், 2014ஆம் ஆண்டில் 99 விசைப்படகுடன் 477 மீனவர்களும், 2015ஆம் ஆண்டில் 43 படகுகளுடன் 273 மீனவர்களும், 2016ஆம் ஆண்டில் 29 மீன்பிடி படகுகளுடன் 140 மீனவர்களும், 2017ஆம் ஆண்டில் 71 படகுகளுடன் 380 மீனவர்களும், 2018ஆம் ஆண்டில் 22 படகுகளுடன் 117 மீனவர்களுமாக கடந்த ஆறு வருடங்களில் 361 படகுகளுடன் 1,778 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாக, ஜெயராஜசிங்கம் சுதாகரன் கூறினார்.
மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டம் நடமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்திய மீனவர்களின் வருகை, கடந்த காலங்களை விட தற்போது 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
5 minute ago
17 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
26 minute ago
2 hours ago