2025 மே 19, திங்கட்கிழமை

21 வயதுக்குட்பட்டோருக்கு சிகரெட் விற்றவருக்கு 3,000 ரூபா அபராதம்

Super User   / 2012 ஜூலை 11 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த  நபருக்கு; யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் 3,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ். மதுவரி நிலைய பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, யாழ். பஸ் நிலையத்தில் குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டு இன்று புதன்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேற்படி வழக்கினை விசாரித்த நீதிவான் நீதமன்ற நீதபதி மா. கணேசராஜா குறித்த வர்த்தகருக்கு 3,000 ரூபா தண்டம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, மது அருந்தி விட்டு வாகனத்தினை செலுத்திய இருவருக்கு யாழ் நீதிவான் நீதிமன்றத்தினால் 12,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ் நகர் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இவருவர் மதுபோதையில் வாகனத்தினை செலுத்தியதாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று யாழ் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

யாழ். நீதிவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா முச்சக்கர வாகன சாரதிக்கு 5,000 ரூபா தண்டம் அறவிட்டதுடன் சாரதி அனுமதிப்பத்திரத்தினை 3 மாத காலத்திற்கு இடைநிறுத்தி வைத்தார்.

அதேவேளை, மற்ற வாகன சாரதிக்கு 7,500 ரூபா தண்டம் அறவிட்டதுடன் எச்சரிக்கை விடுத்து விடுதலை செய்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X