2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

’221 பேருக்கு இடமாற்றம்; 419 பேருக்கு நிராகரிப்பு’

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

இம்முறை, வடக்கு மாகாணத்தில், 221 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார், 419 ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனவெனவும் கூறினார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இதற்கமைய, தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இடமாற்றம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமெனவும் அத்துடன் க.பொ.த உயர்தரத்துக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இடமாற்றம் 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமெனவும் தெரிவித்தார்.

இந்த இடமாற்றத்தில், ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின், டிசெம்பர் 6ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், மேன்முறையீடு தொடர்பான இறுதித் தீர்மானம், டிசெம்பர் 20ஆம் திகதி அறிவிக்கப்படுமெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X