Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
ஐம்பதாயிரம் பட்டதாரிகளை அரச வேலைவாய்ப்புக்குள் உள்வாங்குவதற்கான நியமனங்களுக்காக வடக்கிலிருந்து 5,572 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 3,109 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
2,346 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 117 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் இருந்து 3,460 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1,897 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. 1,506 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல் 57 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 413 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 267 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 127 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல் 19 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து, 344 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 233 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 101 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல் 10 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் இருந்து 658 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 338 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 256 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல், 19 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் இருந்து 697 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 329 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 356 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல் 12 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
ஐம்பதாயிரம் பட்டதாரி நியமனங்களுக்காக நாடளாவிய ரீதியில் 90,129 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 49,050 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 40,092 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 987 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago