2025 மே 19, திங்கட்கிழமை

30 வருடங்களின் பின் யாழ் - நுவரெலியா பஸ் சேவை ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 01 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல், ஆர்.கமலி )

கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் நுவரெலியா - யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பஸ் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய போக்குவரத்து நிலையம் அறிவித்துள்ளது.

இந்த பஸ் சேவையானது தினமும் நுவரெலியா நகரிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு ராகலை, வலப்பனை, அதிகாரியகம வழியாக கண்டி நகரை சென்றடையும் எனவும், கண்டியிலிருந்து புறப்பட்டு ஏ - 9 வழியாக மறுநாள் அதிகாலை யாழ்ப்பாண பேரூந்துத் தரிப்பிடத்தைச் சென்றடையும் என பிராந்திய போக்குவரத்து நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இப்புதிய பேரூந்துச் சேவையால் மலையக மக்கள் இலகுவாக யாழ் நகரத்தை சென்றடையும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ளதாகவும் அது போல் யாழ்ப்பாண மக்கள் மாத்திரமன்றி வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நுவரெலியா வசந்தகாலத்திற்கு நேரடியாக குறைந்த கட்டணத்தில் ஏ - 9 வழியாக எது விதமான சிரமமும் இன்றி மலையகத்திற்கு வருகை தரமுடியும் எனவும் பிராந்தியப் போக்குவரத்து நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X