2025 மே 19, திங்கட்கிழமை

36 வயது பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய முதலாவது சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

Menaka Mookandi   / 2012 ஜூலை 06 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல், ரஜினி)

யாழ்.புகையிரத நிலையத்திற்குள் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களில் முதலாவது சந்தேகநபரை குறித்த பெண் இன்று வெள்ளிக்கிழமை அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காட்டியுள்ளார்.

புகையிரத நிலையத்திற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை 36 வயதான பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண்ணினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுமையை அடுத்து மூன்று இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தனர்.

இன்றைய தினம் குறித்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டவேளை குறித்த பெண் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞனின் தோளில் தட்டி அடையாளம் காட்டியுள்ளார்.

இந்த பாலியல் வல்லுறவு வழக்கு எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் பாடசாலை மாணவன் மற்றையவர்கள் 20, 21 வயதை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X