2025 மே 19, திங்கட்கிழமை

4 வயது சிறுமியை வல்லுறவு புரிந்த சந்தேக நபரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 11 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ஜெ.டானியல்)

யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் 4 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திவிட்டு தலைமறைவானதாகத் தெரிவிக்கப்படும் நபரை யாழ். பொலிஸார் தேடி வருகின்றனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை இச்சிறுமியின் தாயார் கடைக்குச் சென்றிருந்தபோது வீதியால் சென்ற ஒருவர் இச்சிறுமியின் வீட்டினுள் புகுந்து அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திவிட்டுச் தப்பிச்சென்றுள்ளதாகவும்; தாயார் வீடு திரும்பியபோது இச்சிறுமி சட்டையில் இரத்தம் தோய்ந்தவாறு நின்றதாகவும் இதனைத் தொடர்ந்து தனக்கு நடந்ததை இச்சிறுமி தாயாரிடம் கூறியதும் தாயார் இச்சிறுமியை உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் இன்று புதன்கிழமை  தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X