2025 மே 17, சனிக்கிழமை

’4 செயற்றிட்டங்கள் தொடங்கப்படவுள்ளன’

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடமாகாணத்தில் சுமார் 50 பில்லியல் ரூபாய் செலவில், 4 செயற்றிட்டங்கள் இந்த மாதத்தின் இறுதியில் தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், 6 மாதங்களில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இந்த செயற்றிட்டங்களுக்கான நடவடிக்கைகளை தாம் எடுத்திருப்பதாகவும் கூறினார்.

ஆளுநர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

நீண்ட காலமாக இறுபறி நிலையில் இருந்த பருத்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக மீனவர் சங்கத்துடனும் அருகில் உள்ள பாடசாலையுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி சுமுகமான நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

“அந்தத் திட்டமும் வடமராட்சி,ஆனையிறவு களப்புக்களில் இருந்து குடாநாட்டுக்கான குடி நீர் பெறும் திட்டமும் வடமாகாணத்துக்கான கூட்டுறவு வங்கி ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளோம். இந்த 4 பாரிய திட்டங்களும் சுமார் 50 பில்லியன் ரூபாய் செலவில் இந்த மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான நிதியை பாரிய இடர்பாடுகளக்கு மத்தியில் நாங்கள் பெற்றிருக்கின்றோம்.

“மேலும், இந்தப் பாரிய திட்டங்களையும் கூட பல இடர்பாடுகளுக்கு பின்னரே ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். குறிப்பாக பருத்துறை துறைமுகம் அமைப்பதில் பாரிய பிரச்சினைகள் இருந்தது. அதற்காக பாடசாலை சமூகம் மற்றும் மீனவர் சங்கங்களுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.

“அதேபோல் வடமாகாண கூட்டுறவு வங்கியையும் ஆரம்பிக்கவுள்ளோம். அது வியாபார நோக்கம் கொண்ட ஒன்றல்ல. அது கூட்டுறவாளர்களுக்கானது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .