Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
“ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின்கோரிக்கைகளை தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் தமிழ்மக்கள் திட்டவட்டமான முடிவினை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.அதற்கான இறுதிமுடிவினை நாளை எடுக்கவுள்ளோம்” என ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுப்பதர்கான 5 தமிழ்அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (28) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி மூன்றரை மணி நேரம் இடம்பெற்றது.இதன் பின்னர்ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி ஆராய்ந்தோம். தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான தேசியக் கட்சிகள், தமிழ் தேசியக் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக அவர்கள் எடுத்துள்ள நிலைப்பாடுகள் விரிவாக ஆராயப்பட்டது.
ஏனெனில், எமது கோரிக்கைகள் என்பது ஒரு நாட்டுக்குள் இனப் பிரச்சனையை தீர்க்கக் கூடிய விதமாக மட்டுமல்லாது தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நெருக்கடிகளை தீர்ப்பதற்கே முன்வைக்கப்பட்டது.
ஆனால், தென்னிலங்கையில் உள்ள பிரதான தேசியக் கட்சிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் எமது கோரிக்கைகளை இனவாத கோரிக்கைகளாக பூதாகரமாக காட்டுகின்றனர். இந்தக் கட்சியினர் எமது கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் தமிழ் மக்கள் திட்டவட்டமான முடிவுகள் எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவர். எமது ஐந்து கட்சிகளின் இறுதி முடிவுகளுக்கு வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் இணங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம்”என்றார்.
இதேவேளை, குறித்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக அதன்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்றஉறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புளொட் சார்பாக அதன் தலைவரும் நாடாளுமன்றஉறுப்பினருமான த.சித்தார்தன், ரெலோ சார்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்ச.குகதாஸ், மூத்த உறுப்பினர் ஹென்ரி மகேந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக அதன் ஊடக பேச்சாளர் த.அருந்தவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago