Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 மே 31 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி பெற தெரிவு செய்யப்பட்டவர்களில் 52 சதவீதமானவர்களே, தடுப்பூசியை பெற்றுக்கொண்டனரென, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நேற்று (30) 2,948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இந்த எண்ணிக்கை, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள மக்களின் எண்ணிக்கையில், 52 சதவீதமாகுமெனவும் கூறினார்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 83 கிராம அலுவலகர் பிரிவுகளில் கொரோனா தடுப்பூசி மருந்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கேதீஸ்வரன் தெரிவித்தார்.
ஏற்கெனவே தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளுக்கு மேலதிகமாக 22 கிராம அலுவலகர் பிரிவுகளில் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனத் தெரிவித்த அவர், மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுமெனவும் கூறினார்.
குறித்த தினத்தில் தடுப்பூசியைப் பெறத்தவறின், பிறிதொரு தினத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்களினை தவிர்த்துக் கொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், 'ஏனைய கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள பொதுமக்களுக்கும் அடுத்தடுத்த கட்டங்களில் தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்படும்' என்றும் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago