Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாண மாநகர சபையால், 5ஜி வலையமைப்பு அமைப்பது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாதென, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவடடத்தில், ஸ்மாட் கோபுரங்கள், பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்ற போதிலும், யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் மட்டும் நடப்படுவதாகவும் அதில் 5 ஜி அலைக்கற்றை பொருத்தப்படவுள்ளதாக சில நபர்கள் அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு ஸ்மார்ட் கோபுர விடயத்தில் அரசியல் இலாபம் தேட முனைகின்றவர்களை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இலங்கையிலேயே இல்லாத 5ஜி தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்தில் மட்டும் வரப்போகின்றது என போராடடம் நடத்துகின்றனர். இவர்கள் எமது மக்களை முட்டாள்கள் என்று நினைத்தனர் போல உள்ளது. ஆனால் எமது மக்கள் அனைத்தையும் நன்கு அறிவார்கள் எனவும் அவர் கூறினார்.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட், யாழ்ப்பாண மாநகர சபையால், 5ஜி வலையமைப்பு அமைப்பது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நாம் அவ்வாறான உடன்படிக்கை எவற்றையும் செய்யவில்லை.
நாம் ஸ்மாட் கோபுரத்தின் ஊடாக மின்விளக்கு, கண்காணிப்புக் கமரா போன்ற சில அத்தியாவசிய விடயங்கள் தொடர்பிலேயே பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளியில் உள்ள சிலர் கூறுவது போன்று நாம் 5ஜி வலையமைப்பு பொருத்த எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2025