2025 மே 19, திங்கட்கிழமை

6 பாடசாலைக்கு எதிராக வழக்கு தாக்கல்

Editorial   / 2019 ஜனவரி 05 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நுளம்புப் பெருகும் சூழல் காணப்பட்டக் குற்றச்சாட்டில், யாழ். நகர் பகுதிகளில் உள்ள ஆறு பாடசாலைகளுக்கு எதிராக, சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் உள்ள பகுதிகளில், விசேட டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விசேட சோதனை நடவடிக்கைகளின்போது, நுளம்புகள் பரவும் இடங்களைப் பேணியக் குற்றச்சாட்டில், ஆறு பாடசாலைகளுக்கும் எதிராக யாழ். நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி வளாகங்களிலும் நுளம்புக் குடம்பிகள் அதிகளவில் காணப்படுவதாக, கடந்த வியாழக்கிழமை சுகாதார திணைக்களத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X