2025 மே 17, சனிக்கிழமை

615, 000 மக்களே யாழில் உள்ளனர்: மாவட்ட செயலாளர்

Super User   / 2011 டிசெம்பர் 18 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

10 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழவேண்டிய யாழ் மாவட்டத்தில் இன்று சுமார் 1 இலட்சத்து 8 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 15 ஆயிரம் மக்களே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் யாழ். மக்களின் சனத்தொகை விருத்தி குறைவடைந்து வருகின்றது என யாழ் மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆறுமுக நாவலரின் 132ஆவது குரு பூஜைத்தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

30 வருட கால யுத்தம் முடிவடைந்து இன்று மக்கள் மிகவும் அசௌகரியமான நிலையில் விரக்தியோடு இருக்கின்றார்கள். இதுவரை காலமும் பாரிய உயிரிழப்புக்கள், பொருள் இழப்புக்கள் என்பவற்றைச் சந்தித்தும் குடும்பங்கள் பிரிவுபட்ட நிலையில் யாழ் மாவட்டத்தில்; வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

போர் காலத்தை அடுத்து எந்த ஒரு நாட்டிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையே எமது மக்களும் எதிர்நோக்குகின்றனர்.

எமது யாழ். மாவட்டம் போரிற்கு பின்னரான தற்போதைய காலத்தில் கலாச்சார விடயங்களில் கீழ் நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என பலராலும் விமர்சிக்கப்படுகின்றது.

இத்தகைய விமர்சனங்களை செய்வோர் அதனை விடுத்து யுத்த காலத்தினை அடுத்து வாழ்வாதாரமற்று வாழும் 50,000 மேற்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க முன் வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அறநெறிப்பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .