2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

8 வயது மகளை வல்லுறவு புரிந்த தந்தை கைது

Suganthini Ratnam   / 2011 மார்ச் 14 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கோப்பாயில் கடந்த 6ஆம் திகதி தனது 8 வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திவிட்டு தலைமறைவான தந்தையை நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடிகாமம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த தந்தை கொடிகாமத்தில் ஆட்கள் எவரும் குடியிருக்காத வீடுகளில் கூரிய ஆயுதங்களுடன் தங்கியிருந்தவேளையில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அவர் சுற்றி வளைக்கப்பட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எஸ்.வசந்தகுமார் (வயது 32) என்ற தந்தையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

இவர் இன்றையதினம் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 8 வயது மகள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X