2025 ஜூலை 12, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட  இந்திய மீனவர் ஒன்பது பேரை  நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து காங்கேசன்துறை கடற்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை கைது செய்தனர்.

இராமநாதபுரம் பகுதியில் இருந்து இரண்டு படகுகளில் வந்த மேற்படி மீனவர்களின், ஒரு படகு கடலில் மூழ்கிய நிலையில், மற்றைய படகும், மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி மீனவர்களை கடற்படையினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02) ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பிரதிப்பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .