2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அக்கராயன் மேற்குப் பகுதியை கவனிக்குமாறு மனு கையளிப்பு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் மேற்குப் பகுதியில் இயங்காத நிலையிலுள்ள கிராம அபிவிருத்தி சங்கத்தை மீள இயங்க வைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரி, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு அக்கராயன் மேற்கு மக்கள் செவ்வாய்க்கிழமை (20) மகஜர் ஒன்றை கையளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அக்கராயன் மேற்கு கிராமத்தின் உள்வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர் வழங்கப்பட்டுள்ள நிரந்தர வீடுகளில் ஆட்கள் இல்லாத நிலையில் சமூக சீரழிவுகள் நடைபெறுகின்றன. அதனைத் தடுக்க வேண்டும். கிராமத்தின் காணிகள் அளவீடு செய்யப்பட்டு காணி ஆவணங்கள் வழங்கப்படவேண்டும்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் மக்கள் மீளக்குடியமராத காணிகளில் பற்றைகள் வளர்ந்து காட்டுவிலங்குகளின் உறைவிடமாக இக்காணிகள் காணப்படுகின்றன. இக்காணிகளை துப்பரவு செய்து காணி உரிமையாளர்கள் மீளப் பயன்படுத்துவதற்கு காணி உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். ஆகிய கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .