2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அக்கராயனிலிருந்து முக்கொம்பன் வழியான பஸ் சேவை மீள ஆரம்பம்

Niroshini   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயனிலிருந்து முக்கொம்பன் வழியாக யாழ்ப்பாணம் நோக்கி சேவையிலீடுபடும் பஸ் திங்கட்கிழமை (01) முதல் மீள சேவையை ஆரம்பித்துள்ளதாக கிளிநொச்சி சாலை  முகாமையாளர் எஸ்.ஜீவானந்தம் தெரிவித்தார்.

மழையால் ஸ்கந்தபுரம் முக்கொம்பன் வீதி கடும் சேறும் சகதியுமாக மாறியிருந்ததன் காரணமாக குறித்த பஸ் சேவை இரு மாதங்களாக இடம்பெறவில்லை.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி வழியாக அக்கராயன் பகுதிக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போக்குவரத்து செய்வதில் இடர்களை எதிர்கொண்டிருந்தனர்.

தற்போதும் மேற்படி வீதி புனரமைக்கப்படாத நிலையிலும் குறித்த பஸ் சேவை மீள ஆரம்பிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X