Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூலை 04 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி அக்கராயனிலிருந்து வன்னேரிக்குளம் வரையான வீதியில் தற்காலிகப் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் வல்லிபுரம் ஜெயானந்தன் தெரிவித்தார்.
10 கிலோமீற்றர் தூரம் கொண்ட இவ்வீதி, கடந்த மாதம் பெய்த மழையினால் சேதமடைந்திருந்தது. அத்துடன், மதகுகளும் சேதமடைந்தன. இதனால், மதகுகளை நிரந்தரமாகப் புனரமைத்துக் கொண்டு வீதியை தற்காலிகமாக புனரமைத்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மாகாண அமைச்சு ஒதுக்குகின்ற நிதிகளுக்கேற்ற வகையிலேயே வேலைகள் நடைபெறுகின்றன. வீதிகளைப் புனரமைப்பதற்கு கூடுதலான நிதிகள் தேவைப்படுகின்ற போதிலும் கிடைக்கின்ற குறைந்தளவு நிதியினைக் கொண்டு தற்காலிகப் புனரமைப்புகள் முக்கியமான வீதிகளில் நடைபெறுவதாக அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .