2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அகில இலங்கை சைவப்புலவர் பரீட்சை வெள்ளியன்று ஆரம்பம்

George   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 07:34 - 2     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தால் வருடாந்தம் நடத்தப்படும் இளம் சைவப்புலவர், சைவப்புலவர் பரீட்சைகள், 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை, செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.

'பரீட்சைகள் யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் மகா வித்தியாலயம், கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

சைவப்புலவர் பரீட்சைக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து 21 பரீட்சாத்திகளும், மட்டக்களப்பில் 16 பரீட்சாத்திகளும், கொழும்பில் 07 பரீட்சாரத்திகளும், லண்டனில் 05 பரீட்சாதிகளும் தோற்றுகின்றனர்.

இளம் சைவப்புலவர் பரீட்சைக்கு யாழ்ப்பாணத்தில் 51 பரீட்சார்த்திகளும், மட்டக்களப்பில் 39 பரீட்சாத்;திகளும், லண்டனில் 02 பரீட்சாத்திகளும் தோற்றுகின்றனர்.

22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலக்கியம், சரித்திரம் ஆகிய பாடங்களும், 23 ஆம் திகதி சனிக்கிழமை வரலாறு, உரைநடை ஆகிய பாடங்களும், 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலக்கண பாடநெறிக்கான பரீட்சையும் இடம்பெறவுள்ளது.

பரீட்சார்த்திகள், தேர்வு மண்டபத்துக்கு வரும் போது ஆள் அடையாளஅட்டை மற்றும் பரீட்சை அனுமதி அட்டையுடன் சமூகம் தரவேண்டும்' என அவர் மேலும் கூறினார். 

 


  Comments - 2

  • வி. ஜனுஷன் Tuesday, 08 January 2019 02:46 PM

    வரவேற்கத்தக்கது மேலும் இனிவரும் காலங்களில் இந்த பரிட்சை விண்ணப்பங்கள் எமக்கும் அனுப்பி வைத்தால் எமது ஊரிலுள்ள மாணவர்களையும் பங்குபற்ற செய்வோம்

    Reply : 0       0

    வி. ஜனுஷன் Tuesday, 08 January 2019 02:46 PM

    வரவேற்கத்தக்கது மேலும் இனிவரும் காலங்களில் இந்த பரிட்சை விண்ணப்பங்கள் எமக்கும் அனுப்பி வைத்தால் எமது ஊரிலுள்ள மாணவர்களையும் பங்குபற்ற செய்வோம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X