2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அங்கஜனின் கோரிக்கையையடுத்து பணிபுறக்கணிப்பு கைவிடப்பட்டது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊழியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தலையீட்டால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

'வட பிராந்திய முகாமையாளர் மற்றும் கோண்டாவில் டிப்போ முகாமையாளர் ஆகிய இருவரின் முறைகேடான முகாமைத்துவத்தைக் கண்டித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை(30), ஊழியர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊழியர் சங்க அங்கத்தவர்களை அழைத்த நடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) கலந்துரையாடினார்.

'வடபிராந்திய முகாமையாளர் ஊழியர்களிடம் பாரபட்சம் காட்டுகிறார், சிறிய தவறுகளுக்கும் வேலை இடைநிறுத்தம், இடமாற்றம் என பாரிய தண்டனைகளை வழங்குவதுடன் தனக்கு சார்பான ஊழியர்கள் விடும் பாரிய தவறுகளை மூடிமறைக்கிறார். எனவே, அவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரையில் நாம் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

அதேநேரம், கோண்டாவில் டிப்போ முகாமையாளர் மீது இடம்பெற்ற மோசடிக்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முடிவுற்ற நிலையில் அவருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

'இது தொடர்பில்  மத்திய அமைச்சருடன் பேசியுள்ளேன், விரைவில் தீர்வுக்கிட்டும். நல்லூர் திருவிழா இடம்பெறும் இத்தருணத்தில் போக்குவரத்து தடைப்படுவது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இப்போராட்டத்தை கைவிடுங்கள்'  என அங்கஜன் கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் முடிவு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X