2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அடித்து துன்புறுத்தி நகைகள் கொள்ளை

George   / 2016 நவம்பர் 13 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

உடுவில் டச்சுறோட் பகுதியில் உள்ள வீட்டுக்குள் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களை அடித்து, துன்புறுத்தி நகைகளை நேற்று கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

அதிகாலை வீட்டு முன்கதவினை உடைத்து உள் நுழைந்த கொள்ளையர்கள் படுத்திருந்த பெண் மீது முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தலையணையால் முகத்தினை அழுத்தி கொலை செய்வதற்கு முயன்றுள்ளனர்.

எனவே, தன்னை காப்பாற்றி கொள்வதற்காக அவர் எதுவித சத்தமும் இன்றி அமைதியாக இருந்துள்ளார். இதன் போது அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கசங்கிலி, உட்பட 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் தடஅறிவியல் பொலிஸாரின் உதவியுடன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X